சாமியார்கள்
மிகவும் வருத்தத்திற்க்குரிய செய்தி
இது கண்டனத்திற்க்குரியதா; கவலைக்குரியதா என்பது மாறி வரும் மனிதமனங்களின் எண்ணங்களுக்கே உரியது.
வழிக்காட்டிகளாக இருக்க வேண்டியவர்களே; வழித்தவறிப் போவது சமூகம் சீர்க்குலைந்துபோய்க் கொண்டு இருக்கிறது என்பதற்க்கு சான்றாகும்.
இந்த சமூக அவலத்திற்க்கு அடிப்படை மனிதர்களாகிய நம்முடைய செயல்பாடே அன்றி அவர்களின் தவறு அல்ல.
முன்னரே இந்துமதம் என்ற் சமூக அமைப்பின் பண்பாடு, கலாச்சாரம் கேள்விக்குரியாக மாறிவரும் போது; அதற்கு அடிப்படை உயிராக விளங்கும் ஆன்மீக அமைப்புகளின், இம்மாதிரி போக்கு கவலைக்குரியது.
மக்கள் அனைவரும் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் ஏற்படுத்திய வழிமுறைகள் அனைத்தும் இன்று திசைமாறிப் போய்க்கொண்டு இருப்பதற்க்கு, நடைமுறையில் இயங்கிக்கொண்டு இருக்கும் சில ஆன்மீக அமைப்புகளின் செயல்பாடுகளே உதாரணம்.
இந்த பூமியில் அனைவரும் சமமாக படைக்கப்பட்டவர்களே; அதில் சிலர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி -தங்களை மற்றவர்களைவிடசிறந்தவர்களாகவும், உயர்ந்தவர்களாகவும், சித்திப்பெற்றவர்களாகவும், உலகத்தையே மாற்றும் வல்லமை பெற்றவர்களாகவும்வேறுப்படுத்திக் காட்டிக்கொள்கிறார்கள்.
அதைப் புரிந்துக்கொள்ளாமல் அவர்கள் பின் நான் கூட்டமாகச் சேர்ந்துக்கொண்டு, அவர்களை தலைவர்களாகவும், ஞானிகளாகவும் நம்மை காப்பாற்ற வந்தவர்களாகவும் கருதிக்கொண்டு பணமும், புகழும் தருவதுடன் கடவுளாகவும் போற்றித் தொழுகின்றோம் .
நாம் வாழ வேண்டிய வாழ்க்கையை வாழாமல், மற்றவர்களுடன் ஒப்பிட்டு அவர்களைப்போல் வாழ ஆசைப்பட்டு எப்படி, ஏன், எதற்க்காக என்ற காரணக்காரியங்களை ஆராய்ந்துக்கொண்டு, விடைத்தேடி மற்றவர்களிடம் (தலைவர்) சரணடையும் வரை?
தன் குடும்பத்தைக் காக்கும் வழித்தெரியாமல், குடும்பத்தை
விட்டு விலகி தங்களை சாதுக்கள் என்றும், உலகைக் காக்க வந்தவர்கள் என்றும், நம்மையெல்லாம் மோட்சத்திற்க்கு அழைத்துச் செல்லவந்தவர்கள் என்றும் சொல்பவர்களை பின் தொடரும் வரை?
தங்கள் சமார்த்தியத்தை, சக்தியள்ளதாக கூறியும், தங்களை முற்பிறவியில் சிறந்தவர்களின் வாரிசு மற்றும் மறுபிறவி என்றும் கூறிக்கொண்டு தன் குடும்பத்தை காக்க எளிதாக பணம் சம்பாதிக்கவும், மூலதனம் இல்லாத பரம்பரை தொழிலாகவும் ஆன்மீகத்தை செயல்படுத்துபவர்களை நம்பும் வரை?
நாம் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டுமானால் சாத்வீக எண்ணங்களை பின்பற்ற
வேண்டும்; சாதுக்களை அல்ல என்பதை உணராத வரை?
சாதாரணமானவனோ, உயர்ந்தவனோ உணர்வு அனைவருக்கும் பொது; வெளிப்படுத்துவதில் மட்டுமே அவர்களின் மதிப்பு உயர்வதும், தாழ்வதும் என்றுத் தெரிந்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் பூதக்கண்ணாடிக் கொண்டு பார்க்கும் வரை?
மற்றவர்களின் சிந்தனைகளையும், சீர்திருத்தங்களையும் நம் வாழ்க்கைக்கு தேவைப்படும் அளவுக்கு மட்டுமே உபயோகித்துக் கொள்ள வேண்டும், அவர்களை அல்ல என்று உணராத வரை?
நம் வாழ்க்கையின் ஆனந்திற்காக ———————— பல்வேறு-ஆனந்தங்களை நம்மையறியாமலே நாம் உருவாக்கிக்கொண்டுயிருக்கிறோம் என்று தெரியாத வரை?
இந்த பூமியில் நடக்கும் பல்வேறு அவலங்களுக்கு மக்களாகிய நாம் மட்டுமே பொறுப்பு; பொறுப்பை உணரமறுத்தால் நாம் மாக்களே.
“மனிதனை மனிதனாகபார்; தோழமையை துணைக்கொள்
வாழ்க்கை வளப்படும்; சமூகம் சீர்ப்படும்
மனிதன் வேறல்ல; சமூகம் வேறல்ல
மனிதனே (நாமே) சமூகம்
சீர்திருத்தவாதியல்ல சராசரி மனிதன்