தலையங்கம்
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோயம்பத்தூர்-இல் ஜுன் மாதம் 23-27, 2010 (ஆனி மாதம் 9-13 திருவள்ளுவர் ஆண்டு 2041) நடக்க உள்ளது.
தமிழ் -உச்சரிக்கும் போதே உள்ளம் உருகும்; உயிர் கரையும்
இன்று அதன் நிலை நினைக்கும் போதே நெஞ்சம் வெடிக்கின்றது.
1947 ஆம் ஆண்டு நம்நாடு சுதந்திரம் பெற்றப்பின்; 1950 ஆம் ஆண்டு குடியரசு ஆக அறிவிக்கப்பட்டது. பின்னர் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி கொண்டு மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டம் தயாரிக்கப்பட்டு ஜனவரி 19-ல் கவர்னரின் ஒப்புதலைப் பெற்று, அதே மாதம் 23-ந் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இச்சட்டத்தின் படி தமிழகத்தின் ஆட்சிமொழியாக தமிழ் மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1978 ஜுன் 21-ல் தமிழக அரசாணை எண் 1134—இன் படி தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ்பணிபுரியும் அரசு ஊழியர்கள், இன்சியல் முதற்க்கொண்டு தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அது நடைமுறையில் கையாளப்படுகிறதா என்றால் இல்லை என்பதே உண்மை.
மற்றும் பிற் மொழிகளையும் கற்க்கலாம். அதற்காக தமிழை தள்ளவேண்டாம் என்பதே என் கருத்து. எந்த ஒரு புத்தகத்தையும் அதன் தாய்மொழியில் படித்தால் மட்டுமே அதன் உணர்வுகளை அனுபவிக்கமுடியும்
எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
அமுதுக்கும் தமிழ் என்று பெயர்- அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.
தமிழ்மொழி போல் இனியாவது எங்கும் காணோம்
யாதும் ஊரே; யாவரும் கேளீர் என்ற ஒரே வரியில் உலகத்தை ஒன்றுபடுத்தி, உலகமக்கள் அனைவரையும் தோழமைப்படுத்தியது நம் தாய்மொழி-தமிழ்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது -என்று இல்லற வாழ்க்கையின் அருமை, பெருமைகளை ஒன்றே முக்கால் அடியில் உலகத்துக்கு எடுத்துக்குரிய உலகப் பொதுமறையாம் திருக்குறளின் ஆதிமொழி நம் தாய்மொழியாம் -தமிழ் . அதுமட்டுமல்லாமல் 1333 குறளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துபால் என பகுத்து மக்கள் எப்படி வாழவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்வொவ்வா
செய்தொழில் வேற்றுமையால்— என்று அன்றே அவர்களின் (மக்களின்) வேலையைக் கொண்டு மதிப்பிடக்கூடாது என சாதிகளின் அடிமைதளைகளை சாடினார்- ஆனால்
இன்று நாம் அவர் பெயரிலேயே சாதி வைத்துள்ளோம்
உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் பெற்றத்தாயை அழைக்கும் அம்மா என்பதன் ஆணிவேர் நம் தாய்மொழியாம்-தமிழ்
இப்படிபல்வேறு தன்னீகரில்லா தனிப்பெரும் சிறப்புகளை பெற்றுள்ள நம் தாய்மொழியாம்-தமிழ் இப்போது தான் இந்திய அரசால் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெருமைக் கொள்வோம்.
இனிய தமிழ்மொழியை வளர்க்க நம் மாநில அரசு, தமிழ், கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சித்துறையை ஏற்படுத்தியுள்ளது. எத்தனை துறை வந்தாலும் மக்களாகிய நம் ஒத்துழைப்பு இல்லை என்றால், விழலுக்கு இரைத்த நீரைப்போல் வீணேயாகும். அதனால் நாம் தாய்மொழியாம் தமிழ்மொழியை அரவணைப்போம். அதற்கு முன்னோட்டமாக தமிழ் செம்மொழி மாநாட்டில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பங்குக்கொள்வோம். தமிழ் இலக்கண, இலக்கியங்களை தேடிச் சேர்ப்போம். தமிழ் அறிஞர்களைபோற்றுவோம். தமிழ் நூல்களை பயில்வோம்.
தமிழன் என்று சொல்லுவோம் தலைநிமிர்ந்து வாழ்வோம்
வாழ்க தமிழ்- வளர்க தமிழ்
உங்கள் பக்கம்
ENTHIRAN AUDIO RELEASE IN CHENNAI
(1)
இந்தியாவல்லரசு ஆகுமா
(1)
உலக தமிழ் செம்மொழி மாநாடு 2010
(1)
கடவுளிடம் கேட்டேன்
(1)
கவிஞர் கண்ணதாசன்
(1)
கோவில்களும் கோபுரங்களும்
(1)
பஞ்சத்தந்திரம் ( விளக்கம்)
(1)
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
(1)
பொன்மொழிகள்
(1)
மலரட்டும் மனங்கள்; பூக்கட்டும் புதிய பாரதம்
(1)
மாற்றம்
(1)
வடிவேல் ஜோக்ஸ்
(1)
வாழ்க்கை
(1)
No comments:
Post a Comment