உலக தமிழ் செம்மொழி Headline Animator

Sunday, May 2, 2010

கவிஞர் கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன்



காலங்களே தருகின்றன, அவையே பறிக்கின்றன

காலங்களே சிரிக்கச் செய்கின்றன, அவையே அழவும் வைக்கின்றன

காலம்பார்த்துக் காரியம் செய்தால், பூமியையே விலைக்கு

வாங்கலாம்
காலங்களிலேயே காரியங்களின் வெற்றி தோல்விகள்
அடங்கி இருக்கின்றன.

கற்றுக்கொள்

கற்றுக்கொள்
பூக்களிடமிருந்து குலுங்கிச் சிரித்திடவும்
வண்டுகளிடமிருந்து இனிது பாடிடவும்

மரத்தின் வளைந்த கிளைகளிடமிருந்து தலை வணங்கவும்
கொடிகள் மற்றும் மரங்களிடமிருந்து அனைவரையும்
அன்பினால் அரவனைக்கவும்

மீன்களிடமிருந்து தாயகத்திற்காகத் துடிதுடித்து மாளவும்
இலையுதிர்கால மரங்களிடமிருந்து துக்கத்தில் தைரியத்துடன் இருந்திடவும்

விளக்கிடமிருந்து இயன்றவரை அறியாமை இருளைப் போக்கிடவும்
பூமியிடமிருந்து உயிரினங்களுக்கு உண்மையான சேவை புரியவும்

மழைத்துளிகளிடமிருந்து அனைவரிடமும் அன்பைப் பெருக்கிடவும்
மருதாணியிடமிருந்து நம் பண்பின் தாக்கம் அனைவர் மீதும் படர்ந்திடவும்

சூரியகிரணங்களிலிருந்து எழவும், எழுப்பவும்
காற்றின் அலைகளிலிருந்து அசையவும், அசைத்திடவும்
பால் மற்றும் தண்ணீரிலிருந்து சேரவும்; சேர்க்கவும்
சான்றோர்களின் வாழ்விலிருந்து உனது குணநலனை அமைத்திடவும்— தினமும் கற்றுக்கொள்
பிறர் தள்ளும் முன்னால் நீயாக விழ வேண்டாம்

எந்த தவற்றை பிறரிடம் நீகண்டாலும் முதலில் அதைஉன்னிடத்தில் திருத்திக்கொள்

நண்பனை தனிமையில் கடிந்துக்கொள்; பிறர் முன்னிலையில் புகழ்

தளராத இதயம் உடையவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமில்லை

வறுமையிலும் நிறைவு காணும் ஏழையே மிகப்பெரிய செல்வனாவான்

வாயைக் காப்பவன் தன் வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்கிறான்

கடமையைச் செய்; புகழ் மாலை உன் காலடியில் கிடக்கும்
செல்வாக்கு நாய் போல் பின்னால் வரும்

உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவாக இருத்தல்

பணம் பேச தொடங்கும் போது உண்மை ஊமையாகி விடும்

குற்றம் செய்யக் காரணம் தேவையில்லை, சந்தர்ப்பம் போதும்

சுவாமி விவேகானந்தர்—அறிவுரை

சுவாமி விவேகானந்தர்—அறிவுரை
உன் மனச்சாட்சிதான் உன்ககு ஆசான். அதைவிடச் சிறந்த ஆசான் உலகில் இல்லை உனக்காக

தத்துவ ஞானம் எது பேசினாலும் பேசுக;

பிராமணவாதம் எதனைக் கொள்ளினும் கொள்ளுக;

உலகிலே மரணம் என்பது இருக்கும் வரையும்

மனித இதயத்திலே பலவீனம் இருக்கும் வரையும்

அந்த பலவீனத்திலே மனிதனுடைய இதயத்தில் இருந்து அழுக்குரல் வரும் வரையில் ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இருந்தே தீரும்
தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன் தான் நாத்திகன்

மாற்றம்

                                              மாற்றம்

மாற்றங்கள் தேவை

மண்ணின் மணங்களில் மட்டுமல்ல -

மக்களின் மனங்களிலும் தான்

மாற்றங்கள் தேவை

கலைகளின் தரங்களில் மட்டுமல்ல

கல்வியின் விலைகளிலும் தான்

மாற்றங்கள் தேவை

சட்டங்கள் இயற்றுவதில் மட்டுமல்ல
சட்டங்கள் கையாளப்படுவதிலும் தான்

மாற்றங்கள் தேவை

காக்கி, கருப்பு சட்டையில் மட்டுமல்ல

கருப்பாகும் வெள்ளை சட்டையிலும் தான்