கடவுளிடம் கேட்டேன்
நான் வல்லமை வேண்டும் என்று கேட்டேன்.
அவர் கஷ்டங்களைத் தந்தார்.
என்னை வலிமையானவாக ஆக்கிக் கொள்ள.
நான் நல்லறிவு வேண்டி நின்றேன்
அவர் தீர்வு காண்பதற்காக பிரச்சினைகள் பலவற்றை
என் முன்னே வைத்தார்.
நான் வளமை வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அவர் உழைத்து வேலை செய்ய திறமையும் அறிவும் தந்தார்
நான் மனோபலம் வேண்டும் என்று கேட்டேன்.
அவர் சவால்களை என் முன் கொண்டு வந்து நிறுத்தினார்
நான் அன்பைக் கேட்டேன்
அவர் அன்புகாட்டி உதவி செய்ய துன்பப்பட்டவர்கள் அருகில்
என்னை அனுப்பி வைத்தார்.
நான் சிலசவுபாக்கியங்களையும், வசதிகளையும் கேட்டேன்
அவர் வாய்ப்புக்களைத் தந்தார்
என்னை வழிக்களை உருவாக்கச் செய்தார்
நான் பாதையை வேண்டி நின்றேன்
அவர் பார்வையை விசாலமாக்கினார்.
-நான் கேட்டது எதுவும் எனக்கு கிடைக்கவில்லை, ஆனால்
தேவையானது எதுவும் எனக்கு கிடைக்காமல் இல்லை