கற்றுக்கொள்
பூக்களிடமிருந்து குலுங்கிச் சிரித்திடவும்
வண்டுகளிடமிருந்து இனிது பாடிடவும்
மரத்தின் வளைந்த கிளைகளிடமிருந்து தலை வணங்கவும்
கொடிகள் மற்றும் மரங்களிடமிருந்து அனைவரையும்
அன்பினால் அரவனைக்கவும்
மீன்களிடமிருந்து தாயகத்திற்காகத் துடிதுடித்து மாளவும்
இலையுதிர்கால மரங்களிடமிருந்து துக்கத்தில் தைரியத்துடன் இருந்திடவும்
விளக்கிடமிருந்து இயன்றவரை அறியாமை இருளைப் போக்கிடவும்
பூமியிடமிருந்து உயிரினங்களுக்கு உண்மையான சேவை புரியவும்
மழைத்துளிகளிடமிருந்து அனைவரிடமும் அன்பைப் பெருக்கிடவும்
மருதாணியிடமிருந்து நம் பண்பின் தாக்கம் அனைவர் மீதும் படர்ந்திடவும்
சூரியகிரணங்களிலிருந்து எழவும், எழுப்பவும்
காற்றின் அலைகளிலிருந்து அசையவும், அசைத்திடவும்
பால் மற்றும் தண்ணீரிலிருந்து சேரவும்; சேர்க்கவும்
சான்றோர்களின் வாழ்விலிருந்து உனது குணநலனை அமைத்திடவும்— தினமும் கற்றுக்கொள்
பிறர் தள்ளும் முன்னால் நீயாக விழ வேண்டாம்
எந்த தவற்றை பிறரிடம் நீகண்டாலும் முதலில் அதைஉன்னிடத்தில் திருத்திக்கொள்
நண்பனை தனிமையில் கடிந்துக்கொள்; பிறர் முன்னிலையில் புகழ்
தளராத இதயம் உடையவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமில்லை
வறுமையிலும் நிறைவு காணும் ஏழையே மிகப்பெரிய செல்வனாவான்
வாயைக் காப்பவன் தன் வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்கிறான்
கடமையைச் செய்; புகழ் மாலை உன் காலடியில் கிடக்கும்
செல்வாக்கு நாய் போல் பின்னால் வரும்
உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவாக இருத்தல்
பணம் பேச தொடங்கும் போது உண்மை ஊமையாகி விடும்
குற்றம் செய்யக் காரணம் தேவையில்லை, சந்தர்ப்பம் போதும்
உங்கள் பக்கம்
ENTHIRAN AUDIO RELEASE IN CHENNAI
(1)
இந்தியாவல்லரசு ஆகுமா
(1)
உலக தமிழ் செம்மொழி மாநாடு 2010
(1)
கடவுளிடம் கேட்டேன்
(1)
கவிஞர் கண்ணதாசன்
(1)
கோவில்களும் கோபுரங்களும்
(1)
பஞ்சத்தந்திரம் ( விளக்கம்)
(1)
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
(1)
பொன்மொழிகள்
(1)
மலரட்டும் மனங்கள்; பூக்கட்டும் புதிய பாரதம்
(1)
மாற்றம்
(1)
வடிவேல் ஜோக்ஸ்
(1)
வாழ்க்கை
(1)
No comments:
Post a Comment